சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகள் - மத்திய அரசின் நோட்டீசுக்கு வாட்ஸ் அப் பதில்

சமூக வலைதளங்களில் பரவும் போலியான செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-05 06:38 GMT
சமூக வலைதளம் மூலம் பரவும் தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் செய்திகளால் வன்முறை சம்பவங்கள் தொடர்கிறது. இதனைத் தடுக்கும் வகையில், வாட்ஸ்-அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக பதில் அளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, யார் செய்தியை அனுப்ப முடியும் என்பதை குரூப் அட்மின் தேர்வுசெய்யலாம் என்ற செட்டிங்கை அமைத்துள்ளதாகவும்,  மேலும் செய்திகளைப் படிக்காமலும், புரிந்து கொள்ளாமலும் பிறருக்கு அனுப்புவதை தடுப்பதற்கான காரணிகளை உருவாக்குவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ் அப் நடவடிக்கையை பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்