தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ - பார் கவுன்சிலில் பதிவு செய்தார்

இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் திருநங்கை சத்ய ஸ்ரீ, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

Update: 2018-06-30 13:39 GMT
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள  பார் கவுன்சிலில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை வழக்கறிஞராக பதிவு செய்தனர். நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சத்ய ஸ்ரீ என்ற திருநங்கையும் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். இதில், சிறப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்த சத்யஸ்ரீ சர்மிளா, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர்.  
Tags:    

மேலும் செய்திகள்