சென்னை மாவட்டத்துக்கு 20 துணை மின் நிலையங்கள் - அமைச்சர் தங்கமணி
சென்னை மாவட்டத்துக்கு அடுத்த ஆண்டுக்குள், 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக உறுப்பினர் தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 26 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் மேலும் 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மாநகரில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்க இடம் தர மறுப்பது மின் அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுவதாக அமைச்சர் கூறினார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
இதேபோல் திமுக உறுப்பினர் சக்கரபாணி எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, மலைஜாதி மக்கள் வசிக்கும் பகுதியில் 4 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு சோலார் விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.