பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்பு தரும் மக்கள்

புனேவில் உள்ள உணவகத்தில் பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து உணவுகளை வாங்கி செல்கின்றனர்

Update: 2018-06-26 09:31 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளாஷ்டிக் தடைக்கு மக்கள் ஒத்துழைத்து தர தொடங்கியுள்ளனர். அந்த மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கான தடை கடந்த 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, புனேவில் உள்ள உணவகத்தில் பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து உணவுகளை வாங்கி செல்கின்றனர்.பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளதால்,  பொதுமக்கள் புதிய மாற்றங்களை பின்பற்றி ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்