மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-25 06:16 GMT
மும்பை :



மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பந்த்ரா, வில்லே பார்லே, தாராவி, சியான், செம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலை மற்றும் வீதிகளில் சுமார் 5 அடி வரை உயரத்துக்கு வெள்ளநீர் பாய்ந்தோடுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வீடுகள் முன்பும், சாலையோரமும் 
நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் வாகனங்களை எடுக்க முடியாத சிரமத்தில் உள்ளனர். 

குஜராத்:


குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வல்சாத் நகரில் குடியிருப்பு மற்றும் வர்த்தக பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் கடைகள் மூடப்பட்டிருப்பதால், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்