கபினி அணையில் இருந்து 2-ஆவது நாளாக விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு...

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

Update: 2018-06-16 07:44 GMT
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 15 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கபினி அணையில் இருந்து, நேற்று முதல் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்ட இன்னும் நான்கு அடியே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 31 ஆயிரத்து 37 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 437 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  124 புள்ளி 8 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 98 புள்ளி 2 அடியாக உள்ளது. நேற்று ஒருநாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது. இதனிடையே கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியில் இருந்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்