பாடம் சொல்லித்தரும் ரோபோ ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்

ஆடல் பாடலுடன், பாடங்களையும் கற்றுத்தரும் ரோபோவால் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் பாடம் கற்று வருகின்றனர்

Update: 2018-06-06 09:11 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் இயங்கி வருகிறது ஸ்மார்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி, குமார் துரை என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக இந்த பள்ளியை நடத்தி வருகிறார்.

அத்துடன் குழந்தைகளின் கல்விக்கென புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகிறார். அதில் ஒன்று தான் இந்த ரோபோ.

இந்த ரோபோ, குழந்தைகளுக்கு திருக்குறள் உள்ளிட்ட பல பாடங்களை கற்றுத்தருவதுடன், குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஆடல் பாடல் என ரோபோ, ஜாலியாக பாடம் நடத்துவதால், குழந்தைகளும் மிகவும் உற்சாகமாக பாடம் கற்கின்றனர். 

இந்த முறையை மற்ற பள்ளிகளும் பின்பற்றினால், மாணவர்களின் கவனமும் உற்சாகமும் அதிகரிக்கும் என்கின்றனர் குழந்தைகளின் பெற்றோர். 

Tags:    

மேலும் செய்திகள்