கோவையில் இருசக்கர வாகனத்துக்கு டிரைவர். செயலி மூலம் பதிவு செய்து பயணம்..

கோவையில் இருசக்கர வாகனத்துக்கு டிரைவர் அமைத்து பொதுமக்கள் பயணத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

Update: 2018-06-02 05:06 GMT
கோவையில் தனியார் நிறுவனம் ஒன்று பொதுமக்கள் பயணம் செய்ய இருசக்கர வாகனத்தை டிரைவருடன் அமைத்து கொடுக்கிறது. மொபைல் போனில் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தேவையான இடத்துக்கு செல்ல வாகனத்தை பதிவு செய்துக்கொண்டால் டிரைவர் இருசக்கர வாகனத்துடன் வந்துவிடுவார். அடிப்படை கட்டணமாக 15 ரூபாயும் பின் ஒரு கிலோமீட்டருக்கு 3 ரூபாயும் கட்டணமாக விதிக்கப்படுகிறது. பயணம் செய்யும் நபருக்கு ஹெல்மெட் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் பதிவுசெய்து பயணிக்கும் வாடிக்கையாளருக்கு 5 லட்சம் காப்பீடு செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் தற்போது 60 ஆண் டிரைவர்களும் 3 பெண் டிரைவர்களும் பணியில் உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்