ஜூஸ் குடித்த கேப்-ல் ரூ.10000 காலி...பேக்கரியில் நடந்த துணிகர சம்பவம்..வலை வீசி தேடும் போலீசார்

Update: 2023-08-17 14:36 GMT

பெங்களூருவில், ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற போக்குவரத்து விதி அமலுக்கு வந்த பின் ஹெல்மெட் திருட்டு வாடிக்கையாகிவிட்டது. ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட் கட்டாயம் என போலீசார் அறிவுறுத்தி வருவதால், விலை உயர்ந்த ஹெல்மெட்டுகளே திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சபரி சூர்யா என்ற இளைஞர், பழரசம் அருந்துவதற்காக பேக்கரிக்கு சென்றுவிட்டு ஹெல்மெட்டை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார். மீண்டும் பேக்கரிக்கு சென்று பார்த்தபோது, ஹெல்மெட் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து சபரி சூர்யா, கிரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை ஏற்று, போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். காணாமல் போன ஹெல்மெட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்