தன் நண்பா, நண்பிகளுக்காக கால் கடுக்க நின்ற விஜய்...

Update: 2024-06-29 19:10 GMT

காலை துவங்கி இரவு வரை கால்கடுக்க நின்றபோதும் விஜய்யின் முகத்தில் கடுகளவு கூட சலிப்பில்லை...தன் இனிய நண்பா, நண்பிகளின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க தன் உடல்நலனைக் கூட அவர் கருத்தில் கொள்ளவில்லை...

தான் பெரிதும் மதிக்கும் நாயகனை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் கண்ணீர் சிந்தியது நம்மைக் கண்கலங்க வைத்தது...

விழாவில் மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது மாணவி விதர்சனாவின் கவிதைதான்... தன் அடுக்குமொழி கவிதையால் அனைவரையும் புல்லரிக்கச் செய்து விட்டார் விதர்சனா... விஜயே மாணவியின் கவித்திறனைக் கண்டு ஆச்சரியமுற்றார்...

விருது விழா மேடையில் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருக்க தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த மாணவியின் தம்பியைக் கண்டு விஜய் கண்ணடித்ததை அனைவரும் ரசித்தனர்...

உடல் சோர்வையோ...வலியையோ எதையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் மாணவர்களுக்கு விருது வழங்கிய விஜய்க்கு ஒரு தாய் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்...

திடீரென விழா மேடையில் மாணவி ஒருவர் மண்டியிட்டு ரோஜாப்பூ வழங்க...அதை சிரித்துக் கொண்டே வாங்கி விட்டு மாணவியை கவுரவித்தார் விஜய்...

மாணவி ஒருவரின் கோரிக்கைப்படி அவரது தந்தையுடன் இணைந்து கை காப்பைக் கழற்றி மாஸ்டர் ஸ்டைலில் போஸ் கொடுத்து அசத்தினார் விஜய்...

எல்லோருடனும் புகைப்படம் எடுப்பதைப்போல் வழக்கம்போல விஜய் மாணவி ஒருவரின் தோளில் கைபோட்டு போஸ் கொடுக்க... "உங்க கைய கொடுங்கண்ணா" என்று உரிமையுடன் கையை எடுத்துத் தன் கையோடு இணைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததைக் கண்டு விஜய் புன்னகைத்தார்...

எவ்வித எதிர்மறையான நிகழ்வுமின்றி மிக நேர்த்தியாக விழா நடந்தேறியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது...

Tags:    

மேலும் செய்திகள்