நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு - சிக்கிய முன்னணி நடிகர்... கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான அறிக்கையை வெளியிட இடைக்காலத்தடை உத்தரவு தொடர்கிறது. நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னணி நடிகர் திலீப் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிஷன், கேரள திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கையை கடந்த 24ஆம் தேதி வெளியிட தீர்மானிக்கப்பட்ட நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆகஸ்ட் ஆறாம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.