பிரபல நடிகைக்கு வந்த வாட்ஸ்அப் கால்... நடந்ததை ஆதரத்தோடு அப்படியே வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

Update: 2024-08-29 10:25 GMT

நடிகை ஷாலு ஷம்முவிடம் மீண்டும் சைபர் கிரைம் மோசடி முயற்சி அரங்கேறியுள்ளது.

நடிகை ஷாலு ஷம்மு ஏற்கனவே தன்னிடம் கிரெடிட் கார்டு மோசடி முயற்சி நிகழ்த்தப்பட்டது குறித்து வீடியோ பதிவை வெளியிட்டார். இந்நிலையில், மற்றொரு வகையான சைபர் கிரைம் மோசடி முயற்சி அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து அழைப்பதாக கூறி வாட்ஸ்அப் மூலம் நடிகை ஷாலு ஷம்முவிடம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கூகுள் மேப்பில் தாங்கள் குறிப்பிட்ட ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்களுக்கு லைக் மற்றும் கமெண்ட்கள் போட்டு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால், ஜிபே அல்லது பேடிஎம் மூலம், ஒவ்வொரு ரிவியூவிற்கும் 150 ரூபாய் அனுப்பப்படும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதேபோ​ல் பகுதி நேரத்தில் வேலை செய்தால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தினமும் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியதாகவும் ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார். இதுபோன்று சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் ஷாலு ஷம்மு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்