"கேவலமான விஷயம்.." - கடுப்பில் எச்சரிக்கை கொடுத்த சாய் பல்லவி

Update: 2023-09-23 02:44 GMT

நடிகை சாய் பல்லவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்த‌த்தாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இயக்குனர் ஒருவரை திருமணம் செய்த‌தாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலர் சாய் பல்லவியை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இந்த தகவலுக்கு சமூக வலைத்தளம் மூலமாக பதில் அளித்துள்ள சாய் பல்லவி, உள்நோக்கத்தோடு பொய் தகவல் பரப்ப‌ப்படுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகை திரிஷாவும் திருமணம் செய்துகொள்வதாக வதந்தி பரவியதும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த‌தும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்