"மாபெரும் மனிதர் டாடா" - கண்கலங்கிய நடிகர் ரஜினிகாந்த்

Update: 2024-10-11 02:46 GMT

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது ஆர்வம் மற்றும் தொலைநோக்கு பார்வையால், உலக வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்த மாபெரும் மனிதர் டாடா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களுக்கு உத்வேகமாகவும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கியவராகவும், அனைவராலும் நேசிக்கப்பட்ட மனிதர் என்றும் ரத்தன் டாடாவை ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்