2024ன் முதல் பாகத்தில் சற்று டல்லாக இருந்த கோலிவுட் திரைத்துறை, இரண்டாம் பாகத்தில் பரபரத்து வருகிறது..
ஒரே வாரத்தில் 5, 6 படங்கள் என அதகளமாக காட்சியளிக்கிறது திரையரங்குகள்...
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் தங்கலான், டிமான்ட்டி காலனி 2ம் பாகம், ரகு தாத்தா, உள்ளிட்ட படங்கள் ஒரே நாளில் வெளியானது..
இந்த வரிசையில் வாழை, தி கோட் உள்ளிட்ட படங்களும் அடுத்தடுத்து வந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது..
கடந்த வாரம், 'லப்பர் பந்து', 'கடைசி உலகப்போர்', 'நந்தன்' 'கோழிப்பண்ணை செல்லத்துரை' உள்பட பல படங்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீசுக்கு ஆயத்தமாகின. இந்நிலையில் வரும் 27ம் தேதி சினிமா ரசிகர்களுக்கு விருந்தே காத்துக் கொண்டிருக்கிறது.
நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் திரைப்படம் 27ம் தேதி வெளியாகிறது. 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படத்தில், நீண்ட நாள் கழித்து ஸ்ரீதிவ்யா ரீ-என்ட்ரி கொடுப்பதால் தனி கவனம் பெறுகிறது..
இதே போல் பிரபுதேவா, வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படமும் வெளியாகிறது.
இந்த வரிசையில் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படமும் இணைந்துள்ளது. கௌதன் வாசுதேவ் மேனன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் மீதும் தனி எதிர்பார்ப்பு உள்ளது..
இந்நிலையில், நகைச்சுவை நடிகராக இருந்த சதீஷ்-ன் சட்டம் என் கையில் திரைப்படமும் இப்படங்களுடன் மோதுகின்றன.
இத்திரைப்படங்களுக்கு மத்தியில் பான் இந்தியா படமாக வெளியாகிறது தேவரா. ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளதால் அதீத எதிர்ப்பார்ப்பு உள்ளது..
இப்படி வரிசைக்கட்டி படங்கள் வெளியாக காத்திருக்க, அக்டோபரில் வெளியாகும் வேட்டையனை எதிர்பார்த்து காத்திருக்கிறது ரஜினி ரசிகர் பட்டாளம்..
2024ன் செகண்ட் ஹாஃப் தங்களை குஷிப்படுத்தியே இருக்கிறது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்..