வெளியான ஒரே ஒரு ரிப்போர்ட்... நாடு முழுவதும் பற்றிய காட்டு தீ - 70 முறை அழுது, கத்தி, ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-05 09:11 GMT

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலிவுட்டிலும் பாலியல் சர்ச்சை பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளன..இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

கேரள சினிமாத் துறையில் நடக்கும் பாலியல் அவலங்களை படம் போட்டு காட்டி விட்டது ஹேமா கமிட்டி அறிக்கை...

இந்நிலையில் பாலிவுட்டில் இவ்வளவு காலமும் அமைதியாக்கப்பட்ட மீ டூ விவகாரம் இப்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது...

2018ல் நடிகை தனுஸ்ரீ தத்தா பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் இந்தியாவில் Me too விவகாரம் பூதாகரமானது...

தயாரிப்பாளர் வின்டா நந்தாவும் பழம்பெரும் நடிகர் அலோக் நாத்திற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்....

இருந்தபோதும் காலப்போக்கில் படிப்படியாக Me too இயக்கம் தன் வேகத்தை இழந்தது...

குற்றம் சாட்டப்பட்ட பலரது பணிகளை பாலியல் குற்றச்சாட்டுகள் பெரிதாக பாதிக்கவில்லை...

ஆனால் புகார் கூறிய பெண்களோ வாய்ப்புகளை இழந்து தவித்தனர்...

பிரபல சீரியல் நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால், தயாரிப்பாளர் அசித் குமார் மோடியால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார்... ஆனால் அதற்குப் பிறகு அவர் சீரியல் வாய்ப்பையும் வருமானத்தையும் இழந்து பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார்...

70 முறைக்கு மேல் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும்... அழுது...கத்தி...ஆர்ப்பாட்டம் செய்தும் எதுவும் நடக்கவில்லை எனவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்...

அவரைப் போலவே ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான குனீத் மோங்கா, அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஷியாம்லால் குப்தா, உள்ளிட்ட பல பிரபலங்களும் திரைத்துறையில் பாலியல் விவகாரங்களை விசாரிக்க மத்திய அரசின் கீழ் பிரத்யேக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்...

அனைத்து திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் புகார் கூற கட்டணமில்லா எண்களை அரசு ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்டோர் தங்கள் புகார்களைக் கூற வழிவகுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவை மையமாகக் கொண்டிருந்தாலும், அது இந்திய சினிமா முழுக்க எதிரொலிக்கிறது. திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த மாற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா?...என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்