புயலை கிளப்பிய ஹேமா அறிக்கை.. குட்டு உடைந்தும் Back அடிக்கும் நடிகைகள்.. அதிர்ச்சி ட்விஸ்ட்
கேரளாவில் ஹேமா கமிட்டியிடம் வாக்குமூலம் அளித்த 50 பெண்களையும் சந்தித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது. கேரள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. கோரிக்கைகள் வலுத்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஹேமா கமிட்டி அறிக்கையின் அனைத்து பக்கங்களையும் சிறப்பு விசாரணைக்குழுவிடம் வழங்க உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் வாக்குமூலம் அளித்த 50 பெண்களையும் சந்தித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது. வரும் 10 நாட்களுக்குள் 4 குழுக்களாக தனித்தனியே சென்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகாரளித்த சில நடிகைகள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், சிலர் புகாரளிக்கவே முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விசாரணைக் குழுவின் தற்போதைய முடிவால் மேலும் சிலர் புகார் அளிக்க முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.