யாரும் சொல்லாத தமிழ் சினிமாவின் உண்மை பக்கம்...காட்டு தீயாய் பரவும் நடிகை சார்மிளா ஆடியோ

Update: 2024-09-04 05:01 GMT

யாரும் சொல்லாத தமிழ் சினிமாவின் உண்மை பக்கம்... காட்டு தீயாய் பரவும் நடிகை சார்மிளா ஆடியோ - "விஷால், கார்த்தி என்ட்ரி ஆனதும்..."

ஹேமா அறிக்கை குறித்தும், மலையாள திரையுலகம் குறித்தும் மூத்த நடிகை சார்மிளா பரபரப்பு கருத்துகளை முன் வைத்திருக்கிறார். அதனை தற்போது விரிவாக பார்க்கலாம்..

உத்தமனாக வேடம் தரித்து பதுங்கி இருந்த பலரின் முகத்திரையை ஹேமா அறிக்கை கிழித்திருப்பதாக கறார் காட்டியிருக்கிறார் நடிகை சார்மிளா...

தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை சார்மிளாவுக்கு கேரள சினிமா கொடுத்தது கருப்பு பக்கங்கள் தானாம்.. அந்த வேதனை அவரின் வார்த்தைகளில் தெரிகிறது..

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மிகவும் சுத்தம் எனவும் பேசியிருக்கிறார் அவர்.. நடிகைகள் பலர், தற்போது வரை தான் எப்படி மலையாளத்தில் அத்தனை படங்களில் நடித்தேன் என ஆச்சர்யமாக பார்ப்பார்கள் எனவும், இது குறித்து என்னிடமே கேட்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் சார்மிளா..

தமிழகத்தில் புதிதாக குழு ஒன்றும் அமைக்க தேவியில்லை எனவும், தற்போதைய நடிகர் சங்கமே வலுவாக இருப்பதாக கூறிய சார்மிளா, நடிகர்கள் விஷாலிடமும், கார்த்திக்கிடமும் தாராளமாக புகாரளிக்கலாம் என்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்