ஹைப்பை நொறுக்கிய ஒரு டயலாக்... பட்டும் படாமல் கமல் விட்ட வார்த்தையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-07-04 14:00 GMT

மொத்த ஹைப்பை நொறுக்கிய ஒரு டயலாக்

பட்டும் படாமல் கமல் விட்ட வார்த்தையால்

அதிர்ச்சியில் ரசிகர்கள்...என்னாகும் `இந்தியன் 2’

இந்தியன் 2 படத்தின் ரிலீசுக்காக திரையுலகமே காத்திருக்கும் வேளையில், இந்தியன் ஒன்றாம் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் ஒப்பிட்டு அதிருப்தி தெரிவித்து வரும் ரசிகர்களின் புலம்பல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

28 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் என்ற மாஸ்டர் பீஸ் படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் ஷங்கர்...

கமலின் இரட்டை வேடம் தொடங்கி, மேக்கப், வசனம், திரைக்கதை என அனைத்திலும் பின்னி பெடலெடுத்திருப்பார்...

இவை அனைத்தையும் விட பாடல்கள் படத்தை தூக்கி நிறுத்தியதில் முக்கிய அங்கம் வகிக்கிறது..

28 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை இன்றவும் கேட்க வைக்கிறது...

அதிலும் பச்சைக் கிளிகள் தோளோடு பாடல் இன்றும் நம் காதுகளை நிறைக்கும்...

அதேபோல் கப்பலேறி போயாச்சு பாடலில் சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியையும், கமல், சுகன்யா கதாபாத்திரத்துக்கு இடையேயான காதலையும் ஒருங்கே வெளிப்படுத்தி கிறங்க வைத்தனர்.

ஆனால் அதற்கு அப்படியே தலைகீழாகியுள்ளது இந்தியன் 2 பாடல்கள் என்கின்றனர் இசை ரசிகர்கள் பலரும்..

குறிப்பாக அனிருத் இசையமைத்துள்ள கதறல்ஸ் பாடல், கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது...

அதே போல் கம்பேக் இந்தியன் பாடலும் அவ்வளவு கவரவில்லை என்கின்றனர் ரசிகர்கள்...

நீலோற்பம் பாடலை ரசிகர்கள் முணுமுணுத்து வந்தாலும்...டெலிபோன் மணிப்போல் சிரிப்பவள் இவளா, மாயா மச்சிந்த்ரா பாடல்களுக்கு ஈடாக இல்லை என்றும் கூறுகின்றனர்...

பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர், இசையில் விட்டதை பிரமாண்ட காட்சிகளில் பிடித்து விடலாம் என நினைத்து காலண்டர் பாடலை பொலிவியாவில் சென்று படமாக்கியுள்ளார்..

இருப்பினும் பாடல்கள் திருப்திகரமாக இல்லை என ரசிகர்கள் கூறி வரும் சூழலில், கமல்ஹாசனின் கருத்தும் புருவம் உயரச் செய்தது..

இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன் தான் என்றும் அனிருத் இப்போது தான் வந்திருக்கிறார், அவருடைய பாடலைக் கேட்க கேட்க அவருக்கும் ரசிகன் ஆவேன் என நம்பிக்கை தெரிவித்திருந்தார் கமல்..

பட்டும் படாமல் கமல் பேசியிருப்பது பாடல் மீதான அதிருப்தியையே காட்டுவதாகவும் சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டது...

இந்தியன் 2 படத்தில் இசை மட்டுமல்ல வசனங்களும் ரசிகர்களை அத்தனை ஈர்க்கவில்லை...

இந்தியன் 1ம் பாகத்தில் லஞ்சம் குறித்து நெற்றிப்பொட்டில் அடித்தது போல் வசனங்கள் அமைந்திருக்கும்.. அப்படி ஒவ்வொரு வசனத்தையும் செதுக்கியிருப்பார் சுஜாதா...

ஆனால், இந்தியன் 2 டிரைலர் வந்த ஒரே டயலாக் ஒட்டுமொத்த ஹைப்பையும் குறைத்து விட்டது...

ஒரு மாஸ்டர் பீஸ்-ன் இரண்டாம் பாகத்தில் இப்படியொரு வசனத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை...

அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வசனத்தையும் கமல் பேசியிருப்பது, பலரையும் கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது..

இப்படி அடுக்கடுக்கான காரணங்களுக்கு விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், இந்தியன் 2 மீதான எதிர்ப்பார்ப்பு குறையவில்லை என்றே சொல்லலாம்...

கொரோனா ஊரடங்கு, கிரேன் விபத்து, லைகா நிறுவனம் தொடர்ந்து வழக்கு என பல இன்னல்களை கடந்து வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம், எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ?, ஷங்கர் மற்றும் கமலின் காம்போ மீண்டும் ஹிட் அடிக்குமா என்பதற்கு ஜூலை 12ம் தேதி விடை கிடைத்து விடும்..

Tags:    

மேலும் செய்திகள்