1920 நவம்பரில், புதுக்கோட்டையில் பிறந்த கணேசன், சென்னை கிருஸ்த்தவ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின், அங்கேயே வேதியியல் ஆசிரியராக சில காலம் பணியாற்றினார்.
1947ல் எஸ்.எஸ் வாசனின் ஜெமினி ஸ்டுடியோஸில் தயாரிப்பு நிர்வாகியாக சேர்ந்து, ஜெமினி கணேசன் ஆனார். அதே ஆண்டில் மிஸ் மாலினி என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார்.
தாயுள்ளம் படத்தில் வில்லனாக அசத்திய ஜெமினி கணேசன், 1953ல் மனம் போல் மாங்கல்யம் படத்தில் கதாநாயகனாக, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் நடித்தார்.
ஏற்கனவே திருமணமான ஜெமினி கணேசன் பின்னர் சாவித்திரியை காதலித்து மணந்தார்.
எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் கோலோச்சிய 50கள் மற்றும் 60களில், அவர்களின் கால்ஷீட் கிடைக்காத இயக்குனர்கள் ஜெமினி கணேசனை நாடினர்.
ஹீரோ இமேஜ் எதையும் வளர்த்து கொள்ளாமல், பல தரப்பட்ட வேடங்களில், இயல்பான நடிப்பினால், ஏரளமான ரசிகர்களை பெற்றார் ஜெமினி.
புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர்,
இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு
திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன் தான்.
பீம் சிங் இயக்கத்தில் வெளியான பாவ மன்னிப்பு படத்தில்
சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார்.
கொஞ்சும் சலங்கை படத்தில் ஜெமினி பேசிய புகழ் பெற்ற
வசனம் அவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது
பாச மலர் படத்தில் சிவாஜி கணேசனுடன் கோபாவேசத்துடன் மோதும் காட்சி அப்லாஸ் டைப்
ராமு படத்தில் உருக்காமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தார்...
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசனும் ஒருவர். தாமரை நெஞ்சம், பூவா தலையா, இரு கோடுகள், நான் அவனில்லை எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது.
1996இல் கமல்ஹாசனுடன் இணைந்து அவ்வை சண்முகியில் கலக்கியிருப்பார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற ஜெமினி கணேசன், 2005ல் உடல் நலக் குறைவு காரணமாக, 85 வயதில் காலமானர்.
தமிழ் திரைபட உலகில் முத்திரை பதித்த ஜெமினி கணேசன் பிறந்த தினம், 1920 நவம்பர் 17.