'தளபதி 68' படக்குழு தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் தனது 68வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பை பல்வேறு நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பாங்காக் செல்லும் படக்குழு அங்கு பிரம்மாண்ட சேஸிங் காட்சியை படமாக்கவுள்ளதாவும், அதை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது...