பாட்ஷா பட பாடலுக்காக தான் பெற்ற சம்பளத்தை நினைவுகூர்ந்து கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம் என பேசிய தயாரிப்பாளர் எம்.ஆர்.வீரப்பன், பேசியதைவிட 5 ஆயிரம் குறைத்து சம்பளம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியாகி பாடல்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, குறைத்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் தயாரிப்பாளர் வழங்கியதை குறிப்பிட்டுள்ள வைரமுத்து, தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என குறிப்பிட்டுள்ளார்.