ஏ.ஆர்.ரகுமான் சகோதரி உருவாக்கியுள்ள முப்பரிமாண இசை

Update: 2024-02-17 07:55 GMT

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி பாத்திமா ரஃபீக் முப்பரிமாண இசையை உருவாக்கியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு, கோகோ என்ற அமெரிக்க திரைப்படம், முப்பரிமாண இசையை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த இசையைத் தழுவி, தனது இசை அகாடமியில் பயிலும் மாணவர்களைக் கொண்டு முப்பரிமாண இசையை பாத்திமா ரஃபீக் உருவாக்கியுள்ளார். நடனம், நடிப்பு, பாடல் ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ள அந்த இசை நிகழ்ச்சி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு மையத்தில் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்