"12 ஆம் வகுப்பு படித்து முடித்த போது என்னை.." - பிரபல முன்னணி நடிகர் மீது நடிகை பாலியல் புகார்..

Update: 2024-08-25 08:12 GMT

நடிகையின் பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார்...

ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கேரள திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்வேறு விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகை ரேவதி சம்பத் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகரான சித்திக் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்

12 ஆம் வகுப்பு படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த தனது திரைத்துறை மீதான மோகத்தைப் பயன்படுத்தி தன்னை தொடர்பு கொண்டு அழைத்ததாகவும்

அவரை சந்தித்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்து சம்பவம் கேரளா திரை துறையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரள மாநில நடிகர், நடிகைகள் அங்கம் வகிக்கும் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் ராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அம்மா அமைப்பின் தலைவரான மோகன்லாலிடம் சித்திக் வழங்கியுள்ளார்...

தன் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்