இந்திய திரையுலகில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது மலையாள சினிமா...
அந்த வகையில் கேரள அரசால் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...
தன்பாலின ஈர்ப்பாளராக நடித்து...கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி... ஜோதிகாவுக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம்...ரசிகர்களைக் கவர்ந்த காதல் தி கோர் சிறந்த மலையாள திரைப்படமாக தேர்வாகி அசத்தியுள்ளது...
ஆடு மேய்க்கும் அடிமையாக சவுதி சென்று பாலைவனத்தில் ப்ரித்விராஜ் சந்திக்கும் சொல்லொணாத் துயரங்களின் கண்ணீர் கதைதான் ஆடு ஜீவிதம்...
பல ஆண்டுகள் காத்திருந்து உருவாகி...வெளியாகி... பெரிதும் பாராட்டப்பட்ட பான் இந்தியா திரைப்படமான ஆடு ஜீவிதம் 9 விருதுகளைக் குவித்து மிரள வைத்துள்ளது...
சிறந்த நடிகராக அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ஆடு ஜீவிதம் நாயகன் பிரித்விராஜ் தேர்வாகியுள்ளார்...
சிறந்த இயக்குனராக ப்ளஸ்ஸி விருது வென்றுள்ள நிலையில்... சிறந்த திரைக்கதை, ஒளிப்பதிவு, ஒலி கலவை, ஒப்பனை, சிறந்த நடிகருக்கான ஜூரி விருது, பிரபலமான படம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் ஆடு ஜீவிதம் விருதுகளை வென்று அசத்தியுள்ளது...
அதேபோல் உள்ளொழுக்கு திரைப்படத்திற்காக சிறந்த நடிகையாக தேர்வாகியுள்ளார் ஊர்வசி...
சிறந்த ஒலி வடிவமைப்பும் உள்ளொழுக்கு படத்திற்குக் கிடைத்துள்ளது...
ஊர்வசியுடன் விருதைப் பகிர்ந்து கொண்டார் தடவு பட நடிகை பீனா ஆர் சந்திரன்...
தடவு படத்திற்காக பாசில் ரசாக்கிற்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது...
பொம்பள உரிமை, செந்தாமர சாவர், ஜைவம், என்னென்னும், பூக்காலம், உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் கேரள அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...