பீஸ்ட்டை ஓவர்டேக் செய்த கேஜிஎஃப்... தியேட்டர்களை ஆளும் ராக்கி பாய்!

நாடு முழுவதும் கேஜிஎஃப் திரைப்படம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

Update: 2022-04-16 03:43 GMT
நாடு முழுவதும் கேஜிஎஃப் திரைப்படம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு மொழிகளை சேர்ந்த திரைபிரபலங்களும் படத்தை சிலாகிப்பதால், அதுவும் கேஜிஎஃப்பிற்கு கூடுதல் விளம்பரமாகிவிட்டன... ரிலீசான பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆனதால், முதல் நாளிலேயே படம் வசூல் வேட்டை தான்... குறிப்பாக தமிழ்நாட்டில் விஜயின் பீஸ்ட் ரிலீசானதால், முதல் நாளில் சுமார் 250க்கும் அதிகமான திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது... ஆனால் இப்போது கதையே வேறு... பீஸ்ட் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனமும், கேஜிஎஃப்பிற்கு பெருகி வரும் வரவேற்பும், இரண்டாம் நாளிலேயே தியேட்டர் ஸ்கீரின்கள் எண்ணிக்கையும், காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வைத்தது.. ஹவுஸ் புல் ஆன தியேட்டரில் கூடுதல் நாற்காலிகளை போட்டு படம் பார்த்த நிலையெல்லாம் வந்ததாக தகவல்...இந்தியில் முதல் நாளில் அதிக வசூல் படைத்த படம் கேஜிஎஃப் -2 தான்... ஷாகித் கபூரின் ஜெர்சி படம் பின்வாங்க, இந்தி மொழியில் மட்டும் 53 கோடியே 95 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் முதல் நாளிலேயே 134 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டி இந்திய திரையுலகை அதிரவைத்துள்ளது கேஜிஎஃப்...
Tags:    

மேலும் செய்திகள்