'பீஸ்ட்' திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து பேசிய நடிகர் விஜய்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து வசனம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-04-13 04:47 GMT
'பீஸ்ட்' திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து பேசிய நடிகர் விஜய்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து வசனம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கி உள்ள பீஸ்ட் திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இத்திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் உள்ள காட்சி ஒன்றில் "உங்களுக்கு மொழிமாற்றம் செய்ய, தான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது எனவும், தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்" என்றும் நடிகர் விஜய் பேசுவதாக வசனம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து சர்ச்சையான நிலையில் நடிகர் விஜய்யின் இந்தி மொழி குறித்த வசனம் பேசுபொருளாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்