ஆசியாவின் முதல் "ஸ்பிளிட் ஸ்கிரீன்" படம் பிகினிங்

கவனத்தை ஈர்த்த "பிகினிங்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகும் "பிகினிங்"

Update: 2022-02-28 07:04 GMT
ஆசியாவிலேயே முதல் முறையாக "ஸ்பிளிட் ஸ்கிரீன்" காட்சியிடல் முறையில் உருவாகிவரும், பிகினிங் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கவனத்தை ஈர்த்துள்ளது. திரையை ஒன்றுக்கும் மேற்பட்டதாக பிரித்து, காட்சிகளை அமைப்பது ஸ்பிளிட் ஸ்கீரின் எனப்படுகிறது. ஒரே திரையில் ஒரே நேரத்தில் 2 காட்சிகளை காட்டும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, பிகினிங் என்ற திரைப்படம் தமிழ்த் திரைத்துறையில் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இப்படத்தை இயக்குகிறார். குற்றம் கடிதல் உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை எடிட் செய்த சி.எஸ்.பிரேம்குமார், பிகினிங் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். வினோத் கிஷன், கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்