சபரிமலைக்கு மாலை அணியும் நடிகர் சிம்பு
மாநாடு படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்தில் சிம்பு நடிக்க இருந்த நிலையில், படப்பிடிப்புக்கு அவர் வராததால் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை இயக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, சிம்புவின் தாயார் தலையிட்டு பேச்சு நடத்தியதை அடுத்து, சிம்பு மீண்டும் 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, சிம்பு சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 40 நாள் விரதம் இருப்பதால், அவர் 'மாநாடு' படப்பிடிப்பில் கலந்து கொள்வது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.