"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

Update: 2019-08-01 09:46 GMT
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான், இந்தோனேஷியா, மாலத்தீவு, சீனா, மலேசியா, வங்கதேசம், ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்கின்றன. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வீரர்கள் வந்து சிறப்பு கால்பந்து போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. வரும் 3ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, ஐக்கிய நாடுகளின் தற்போதைய தூதரக பிரதிநிதி கென்ட் மே ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து  போட்டிக்கான ஜோதியை நடிகர் அருண் விஜய் ஏற்றி வைத்தார். மனநலம் குன்றிய குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்க இது போன்ற போட்டிகள் உதவும் என அருண் விஜய் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்