நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - வத‌ந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் சல்மான் கான்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-22 23:26 GMT
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என சல்மான் கான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்  காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த 21 ஆம் தேதி பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவு ஒன்றுக்கு பதில் அளித்த சல்மான்கான், இந்தியர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பது அவர்களது கடமை என்று வலியுறுத்தினார். இதனால் அவர் பாஜக சார்பில் போட்டியிடபோவதாக வதந்திகள் எழுந்தன.  இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் எந்த கட்சியிலும் போட்டியிடவும் போவதில்லை, எந்த கட்சிக்காகவும் பிரச்சாரமும் செய்யப்போவதில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்