கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று...

தனித்துவமான தனது நடிப்பால் மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று.

Update: 2018-11-29 12:57 GMT
* நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரி பகுதியில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த கலைஞன். தனது வித்தியாசமான நடிப்பாலும், நகைச்சுவை மிகுந்த உடல்மொழியாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.

* ஆரம்ப காலத்தில் சினிமா கொட்டகையில் சோடா விற்கும் பையனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கை, திரையுலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன் பல போராட்டங்களையும் எதிர்கொண்டது... வில்லுப்பாட்டு கலைஞனாக தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்த என்எஸ்கே, நாடகத்துறையில் தனித்துவம் பெற்று கோலோச்சினார்.

* மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்த நாடகத்துறையில் சமூக சீர் திருத்த கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இவர்.. திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி.

* அதன்பிறகு பைத்தியக்காரன், நல்ல தம்பி, சக்கரவர்த்தி திருமகள், அம்பிகாபதி, தங்கப்பதுமை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்.. இவருடன் நடித்த நடிகை மதுரத்தை விரும்பி, திருமணமும் செய்து கொண்டார். அப்போதைய திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக கோலோச்சிய இவர்கள், தங்கள் படங்களில் சமூக சீர்திருத்த கருத்துகளை நகைச்சுவையாக கொண்டு சென்றனர். 

* பல படங்களில் பாடகராகவும், இயக்குநராகவும் பணியாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன், தனது 49 வது வயதில் காலமானார். தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்கும் இவரின் பெருமை எப்போதும் நிலைத்திருக்கும்... 
Tags:    

மேலும் செய்திகள்