2-ம் கட்ட படப்பிடிப்புக்கு புறப்பட்ட ரஜினி
2-ம் கட்ட படப்பிடிப்புக்கு புறப்பட்ட ரஜினி
ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கி நடைபெற்றது. சுமார் 27 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு தற்போது 2ம் கட்ட படப்பிடிப்புக்காக டேராடூன் சென்றுள்ளது. இதில் கலந்துகொள்ள ரஜினியும் டேராடூன் சென்றுள்ளார். இம்முறை சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இந்த வார இறுதியில் விஜய் சேதுபதியும் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.