நீங்கள் தேடியது "Baby Selling Audio"
12 May 2019 4:59 AM IST
கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது - வைகோ
மார்க்கெட்டில் கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளதாக வைகோ வேதனை.
28 April 2019 5:59 PM IST
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை... வெளியானது திடுக்கிடும் தகவல்
தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.
28 April 2019 5:36 PM IST
செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக்கப்படும் மலைவாழ் குழந்தைகள்...பெற்றோர் வேதனை
ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒசூர் அருகே மலைவாழ் இனத்தை சேர்ந்த சிறுவர்களை சிலர் கடத்தி சென்று கொத்தடிமைகளாக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
28 April 2019 9:30 AM IST
பெண் குழந்தை வேண்டாம் - கொல்லிமலை மக்கள்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வறுமையின் காரணமாக குழந்தைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து கள நிலவரத்தை தெரிந்துகொள்ள தந்தி டி.வி. அப்பகுதி மக்களுடன் பேசியது.
27 April 2019 10:20 PM IST
(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?
(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...? - சிறப்பு விருந்தினராக - உமாசங்கர் ,செயற்பாட்டாளர் // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // ஆவடி குமார் , அதிமுக
27 April 2019 6:22 PM IST
மாயமான குழந்தை, கிடைத்தது...திரும்ப விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்?
பழனியில் சாலையோரம் வசித்து வந்த நடைபாதை வியாபாரியின் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் திரும்ப விட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
27 April 2019 4:33 PM IST
"குழந்தை விற்பனை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது" - கமலா செல்வராஜ், மருத்துவர்
குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை தடுக்கப்பட வேண்டும் என டாக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
26 April 2019 1:32 PM IST
குழந்தை விற்பனை விவகாரம் : "அழகான குழந்தைகளுக்கு அதிக விலை" - அதிர்ச்சி ஆடியோ
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை போல், பச்சிளம் குழந்தைகளை, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, பேரம் பேசி விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
26 April 2019 12:55 PM IST
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு
கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டவர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
26 April 2019 6:46 AM IST
குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை - தரகர் அமுதவள்ளி உள்ளிட்ட இருவர் கைது...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 April 2019 1:51 PM IST
ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
25 April 2019 1:23 PM IST
"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ
ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.