இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஒன்றரை மாதத்துக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளார். கொழும்பில் உள்ள கட்டுநாயக பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு வந்தடைந்தார்.இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து கிளர்ந்தெழுந்த மக்கள், போராட்டத்தின் உச்சகட்டமாக கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச, ஜூலை 13-ஆம் தேதி மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார். மறுநாள் சிங்கப்பூர் சென்றடைந்த அவர், அங்கிருந்தபடி இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், ஆகஸ்ட் 11-ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து அவர் தாய்லாந்துக்குச் சென்றார். கடந்த 3 வாரங்களாக தாய்லாந்தில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சவின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ததை அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.former Sri Lanka president Gotabaya Rajapaksa returned to Colombo