ஹைப் ஏற்றும் பிரான்ஸ் ஒலிம்பிக் - ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சொன்ன அதி முக்கிய தகவல்கள்

x

பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்லும் என்று இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி பலமுறை தங்க பதக்கங்களை குவித்த முன்னாள் ஹாக்கி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், முன்னாள் ஹாக்கி வீரர்களான பாஸ்கரன், முனீர் சைட், சார்லஸ் பிலிப்ஸ் ஆகியோருக்கு விருதுகளும் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஸ்கரன், இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியினர் ஏராளமான பதக்கங்களுடன் தாயகம் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்