விறுவிறுப்பாக நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்பாரிஸ் ஒலிம்பிக் பதக்கத்தின் சிறப்பம்சங்கள்...

x

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகள் பதக்க வேட்டையைத் தொடங்கிவிட்டன. பதக்கங்களை வசப்படுத்தி தங்கள் பெருங்கனவை நனவாக்கி வருகின்றனர் வீரர்கள்...

வெற்றிக்கு ஏற்ப தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுவது வாடிக்கைதான் என்றாலும், இம்முறை பதக்கங்களுக்குள் பிரான்ஸின் அடையாளமே ஒளிந்திருக்கிறது.

வெற்றி பெறும் வீரர்கள் பதக்கங்களை மட்டுமின்றி பிரான்ஸின் அடையாளத்தையும் தத்தமது தேசத்திற்கு கொண்டு செல்கிறார்கள்...

ஆம்... பிரான்ஸின் அடையாளமான ஈபிஃள் டவரை பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்.

என்ன??? ஈபிள் டவரை எடுத்துச் செல்கிறார்களா என ஆச்சர்யப்படாதீர்கள்...

பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் பதக்கங்களில் ஈஃபிள் டவரின் இரும்புப் பாகங்கள் கலந்திருப்பதைத்தான் அப்படி சொல்கிறார்கள்.

பல்வேறு காலங்களில் ஈஃபிள் டவரை புனரமைக்கும்போது அகற்றப்பட்ட பாகங்களை சேமித்து வைத்திருந்த பிரான்ஸ்.... அதை தற்போது ஒலிம்பிக் பதக்கங்களில் சேர்த்துள்ளது. பதக்கங்களில் ஹெக்சகன் வடிவத்தில் இடம்பெற்று இருப்பது ஈஃபிள் டவரின் பாகங்கள் தான்...

வீரர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் எடை 529 கிராம்.. சுமார் அரை கிலோ... அப்படி என்றால் அரை கிலோ தங்கம் அதில் இருக்கிறதா என்றால்... இல்லை என்பதுதான் பதில்....

தங்கப் பதக்கத்தின் எடை அரை கிலோவாக இருந்தாலும் அதில் கலக்கப்பட்டு இருக்கும் தங்கத்தின் எடை வெறும் 6 கிராம்தான்... தங்கப் பதக்கத்தில் அதிகமாக வெள்ளிதான் கலந்திருக்கிறது. ஆனால் வெள்ளி பதக்கம் முழுமையாக வெள்ளியாலும், வெண்கலப் பதக்கம் முழுமையாக வெண்கலத்தாலும் செய்யப்பட்டுள்ளது.

பதக்கத்தின் பின்புறம் கிரேக்கத்தின் வெற்றிக் கடவுளான நைக்... அக்ரோபோலிஸ் நினைவுச் சின்னம்... ஈபிஃள் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் வீரர்களுக்கு வழங்கப்படும் ஒரு செவ்வக வடிவப் பெட்டியும் கவனம் பெற்றுள்ளது.

mysterious box என அழைக்கப்படும் அந்தப் பெட்டிக்குள் என்னதான் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த mysterious பெட்டிக்குள் பெரிய மர்மம் புதைந்திருக்கவில்லை... பாரிஸ் ஒலிம்பிக் இலச்சினை பொம்மை, பாரிஸ் நகரின் கார்ட்டூன் போஸ்டர் ஆகியவைதான் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்