ஒலிம்பிக்கில் தப்பாத குறி.. தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வீராங்கனை
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் துப்பாக்கி சுடுதலில் அடுத்தடுத்து 2 வெண்கல பதக்கங்களை பெற்று, இந்திய வீராங்கனை மனு பாக்கர் சாதனை படைத்தார். இதுதவிர 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3-வது பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதையடுத்து இந்தியாவிலுள்ள சில தனியார் நிறுவனங்கள், தனது லோகோவுடன் மனு பாக்கருக்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்தனர். இதையறிந்த மனு பாக்கர், அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் அவரை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளன. மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருந்த நிலையில், தற்போது ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.