ஒலிம்பிக் வீராங்கனைக்கு பாய் ஃப்ரெண்டால் நேர்ந்த கதி

x

ஒலிம்பிக் விதிகளை மீறி BOY FRIEND உடன் வெளியே சுற்றிய பிரேசில் நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். உரிய அனுமதியின்றி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியே சென்று, தனது பாய் பிரண்டும் (BOY FRIEND) சக வீரருமான சான்டோஸ் உடன் கரோலினா அவுட்டிங் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கரோலினாவை ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்குவதாகவும், உடனடியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கரோலினாவுடன் அவுட்டிங் சென்ற சான்டோஸை இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்