``அழகால் திருப்பி அனுப்பப்பட்டாரா... நீச்சல் வீராங்கனை..?'' ஒலிம்பிக்கில் வெடித்த சர்ச்சை

x

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் வீராங்கனை ஒருவர் அதிகப்படியான அழகால் வீரர்களின் கவனத்தை சிதறடித்ததால் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.. என்ன நடந்தது?.. யார் அந்த வீராங்கனை?... பார்க்கலாம்...

பராகுவேவைச் சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சா.... பேரழகின் உயிர் வடிவம் என தலையில்தூக்கி வைத்து ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்...

100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவு நீச்சல் போட்டியில் வெறும் அரை வினாடியில் அரையிறுதி வாய்ப்பை அலோன்சா தவறவிட்டார். போட்டி முடிந்த பிறகு தனது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஒலிம்பிக் கிராமத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்குதான் பிரச்சினையே ஆரம்பம் ஆகி இருக்கிறது. அலோன்சாவின் அதிகப்படியான அழகிற்கு ரசிகர்கள் மட்டுமல்ல... வீரர்களும் கிறங்கிப்போனதாக தெரிகிறது..

அலோன்சா தன்னுடைய பேரழகால் வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறார் என சர்ச்சைப் புகார்கள் பூதம்போல் கிளம்ப, உங்களின் சேவை போதும் என அலோன்சாவை பராகுவேவிற்கே pack செய்திருக்கிறது அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி....

அலோன்சா அணிந்த ஆடைகளும் அவர் பழகிய விதமும்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், தான் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் இதுவல்ல என அலோன்சா மறுத்துள்ளார்...

மட்டுமின்றி தான் நீச்சல் போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாகவும் அறிவித்து அலோன்சா அதிர்ச்சி அளித்துள்ளார்.

அலோன்சாவின் இந்த அறிவிப்பு, ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியுள்ள நிலையில், அலோன்சா அமெரிக்கா சார்பில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்