🔴LIVE : உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம் - சிக்கியவர்களை மீட்கும் பரிதாப காட்சிகள்
நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டிடங்கள்.. உடைமைகளுடன் உயிர் பிழைத்து ஓடும் மக்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
துருக்கி, சிரியாவை மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீட்டுக்கட்டாக சரிந்த கட்டிடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிரியா எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துருக்கியின் காஸியான்டெப் பகுதியை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுக்கோலில் 7.8 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும் அப்பகுதியிலிருந்த கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக்கட்டாக சரிந்து விழுந்தன.
இந்த துயரத்தில் என்ன நடந்தது என தெரியாமலே பலர் இறந்துவிட்ட நிலையில், இடிபாடுகளுக்கு உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பணியை மீட்பு படைகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே துருக்கியின் எல்பிஸ்தான், சிரியாவின் டமாஸ்கஸ் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நேரத்திற்கு எதிரான போராட்டங்களில் காயங்களுடன் மீட்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
இதனிடைய இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.