🔴LIVE : நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரம் - அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் செய்தியாளர் சந்திப்பு | நேரலை காட்சிகள்
- அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர் சந்திப்பு
- அண்ணா பல்கலை. பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பாக விளக்கம்
- "மோசடி கும்பலுக்கும், அண்ணா பல்கலை.க்கும் சம்பந்தம் கிடையாது"
- "நவம்பரில் விருது வழங்கும் விழா என அனுமதி கேட்டனர், நாங்கள் வழங்கவில்லை"
- "ஜனவரியில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் பரிந்துரை கடிதம் வந்ததால் அனுமதி வழங்கினோம்"
- "பல்கலை. பெயரை தவறாக பயன்படுத்தி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்கது"
- "இந்த விவகாரத்தில் நீதிபதியும் ஏமாந்துள்ளார்"
- "நீதிபதி பெயரில் போலியான கடிதத்தை வழங்கியுள்ளனர்"
- "நாங்கள் நீதிபதியிடம் கேட்க தவறிவிட்டோம்"
- "சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்"
- "போலி டாக்டர் பட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பி நஷ்ட ஈடு கேட்போம்"
- "போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"
- "இனி, அரங்கை வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம்"
- "58 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தி உள்ளனர்"
- "நீதிபதியின் பெயரை பார்த்து அனுமதி வழங்கினோம்"
- "நீதிபதியின் கையெழுத்தை போலியாக இட்டு கடிதம் அனுப்பினார்களா என சந்தேகம்"
Next Story