ஓட்டு மெஷினில் அடுக்கடுக்கான சந்தேகங்களை கிளப்பிய இந்தியா கூட்டணி - ஒரே போடாக போட்ட உச்சநீதிமன்றம்

x
  • ஓட்டு மெஷினில் அடுக்கடுக்கான சந்தேகங்களை கிளப்பிய இந்தியா கூட்டணி - ஒரே போடாக போட்ட உச்சநீதிமன்றம்
  • வாக்களித்தவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும், விவிபேட் இயந்திரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
  • வாக்காளர்கள் தனது வாக்கை செலுத்திய பின், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதுதான் விவிபாட் இயந்திரம். 2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இயந்திரத்தின் மீது துவக்கம் முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளையும், சந்தேகங்களையும் பல கட்சிகள் எழுப்பின. இந்த நிலையில்தான், ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தன.
  • அதாவது விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் என்ன வேண்டும், அதை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதுதான் வழக்கின் சாராம்சம்
  • விவிபாட் இயந்திரத்தின் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு, பல்வேறு கட்டங்களில் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ததாக தெரிவித்துள்ளது.
  • தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும், தேர்தல் முடிவுகளை அறிவித்த பின் 45 நாட்களில் இயந்திரத்தை சீல் வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வாக்குப்பதிவில் குளறுபடி என வேட்பாளர்கள் யாராவது இயந்திரத்தை சரிபார்க்க விரும்பினால், தேர்தல் ஆணையம் கட்டணம் பெற்றுக் கொண்டு, சோதனை செய்ய வேண்டும். ஒரு வேளை குளறுபடி நடந்திருக்கும் பட்சத்தில் கட்டணத்தை திருப்பி தரவேண்டும்.
  • தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலரை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5% ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார் கோடு இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் உன நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
  • விவிபாட் இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
  • விவிபாட் இயந்திரத்தின் தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது என கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கறார் காட்டியுள்ளது
  • விவிபாட் இயந்திரம் தொடர்பாக இந்தியா கூட்டணி பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது. இந்தியா கூட்டணி இந்த வழக்கில் என்ன எதிர்வினையாற்றும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்