காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • 18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது... புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்.பி.க்கள் இன்று பதவியேற்கின்றனர்... தற்காலிக சபாநாயகராக மஹ்தாப்-க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்...
  • ஒருநாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது, தமிழக சட்டப்பேரவை... முதல் இரண்டு நாட்கள் அவையை புறக்கணித்த அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்பார்களா? என எதிர்பார்ப்பு...
  • விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்வு... கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதான இளைஞர் உயிரிழப்பு...
  • கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்... கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12ஆக உயர்வு...
  • விஷ சாராய கும்பலுக்கு மாதேஷ் மூலம் சப்ளை செய்யப்பட்ட மெத்தனால் பேரல்கள் எங்கே?... சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை...
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் கடந்த 18ம் தேதி உயிரிழந்தவரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை... சின்னசேலம் வட்டாட்சியர் முன்னிலையில் நடவடிக்கை...
  • விஷ சாராய விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்... அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என அறிவிப்பு...
  • கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் கண்டிக்கத்தக்கது... சிபிஐ விசாரணை தேவை என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி...
  • நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக, மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று வழக்குப்பதிந்தது சி.பி.ஐ... ஆயிரத்து 563 மாணவர்களுக்காக நடைபெற்ற நீட் மறு தேர்வில் 750 பேர் பங்கேற்காததால் அதிர்ச்சி...
  • நீட் தேர்வு போலியான மருத்துவர்களை மட்டுமே உருவாக்கும்... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம்...
  • திருவாரூர், திண்டிவனம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை... வெயில் வாட்டி வதைத்த நிலையில் இதமான சூழல்
  • உலகக்கோப்பை டி20 தொடரில் வெஸ்ட் இன்டீஸ் - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே பலப்பரீட்சை... குரூப் 2 பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணி யார் என எதிர்பார்ப்பு... குரூப் 1 பிரிவில் வாழ்வா, சாவா போராட்டத்துடன் இந்தியாவை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா...

Next Story

மேலும் செய்திகள்