காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் விஷ சாராய விவகாரம்... ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
- கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று... தம்மை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ள நிகழ்வு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம்...
- விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி... உறவினர்களுக்கு ஆறுதல்... முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிவாரணத் தொகையையும் வழங்கினார்...
- கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு... பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து வருவாய்த் துறையினருடன் ஆலோசனை...
- விஷச் சாராய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை கிடைத்த பின் உரிய நடவடிக்கை... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டம்...
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு... 100-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்...
- கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் 6 பேரது உடல்கள் அடக்கம்... மழை குறுக்கிட்ட நிலையில், 21 பேரின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தகனம்... மரணித்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுததால் எங்கும் மரண ஓலம்...
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் துக்க நிகழ்வுக்கு சென்றபோது பாக்கெட் சாராயம் அருந்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம்... சாராயம் குடித்ததும் கண் மங்கலானதாவும், மயக்கம் வந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தகவல்...
- மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தற்காலிக பணியிட மாற்றம்... சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் வசம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக ஒப்படைப்பு...
- விஷச் சாராய சம்பவம் நடந்த கருணாபுரத்தில் விசாரணையை துவங்கியது சி.பி.சி.ஐ.டி... சாராய வியாபாரி சின்னதுரை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 தனிப்படை அமைத்து விசாரணை...
- கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம், தமிழக அரசியல் வரலாற்றில் கருப்பு தினம்... அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்...
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று... ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி...
Next Story