காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் பெய்த மழை... சூறைக்காற்றுடன் புறநகர் பகுதிகளிலும் பெய்தது....
  • தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக பெய்த கனமழை... மதுரை, ஓசூர், குடியாத்தம், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்த்தது...
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • டெல்டா விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக 78 கோடி ரூபாயில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • மேகதாது விவகாரம் குறித்து மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்... டெல்டா விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கருத்து...
  • இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார்... கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு...
  • ரேபரேலி தொகுதியை ராஜினாமா செய்தால், அங்கு பாஜக வெற்றி பெற்று விடும் என ராகுலுக்கு அச்சம்... வயநாடு தொகுதியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தது பற்றி உத்தர பிரதேச பாஜக தலைவர் கருத்து...
  • பெண் வேட்பாளர்கள் அதிகரித்து, அதிக அளவிலான பெண்கள், நாடாளுமன்றத்துக்குள் செல்ல வேண்டும்... வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவது குறித்து, ராகுலிடம் தோல்வியடைந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா கருத்து...
  • நம்முடைய தாய்மொழிக் கல்வியை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு... சமூகத்தில் அப்போது சாதி இல்லை எனவும் கருத்து...
  • தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு... மீறி இயக்கப்படும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை...
  • சென்னை பெசன்ட் நகரில் சாலையோரம் போதையில் படுத்துறங்கிய இளைஞர் மீது கார் ஏறி இறங்கியதில் உயிரிழப்பு... விபத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்...
  • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் மற்றும் ஆப்கன் அணிகள் பலப்பரீட்சை... சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நாளை தொடங்குகின்றன...

Next Story

மேலும் செய்திகள்