காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • தன்னுடைய என்ட்ரி அதிமுகவில் ஆரம்பமாகி விட்டது என சசிகலா அதிரடி அறிவிப்பு... மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும், 2026ல் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பேட்டி...
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியல்ல என சசிகலா கருத்து... அதிமுகவில் சாதி அரசியல் தொடங்கி விட்டதாக விமர்சனம்... தற்போது அதிமுகவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டதாகவும் உற்சாகம்...
  • தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் தி.மு.க.வுக்கு துணையாக இருக்கிறார்கள்... விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ். விளக்கம்...
  • அதிமுகவை தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு... தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பவில்லை எனவும் விளக்கம்...
  • அதிமுகவில் என்ட்ரீ என சசிகலா அறிவித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ஓ.பி.எஸ்.... வரும் 20ம்தேதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகளுடன், முக்கிய ஆலோசனை.....
  • வரும் 20ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த பயணம் திடீரென ஒத்திவைப்பு.. மறுதேதி பின்னர் வெளியாகும் என தகவல்...
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்கும் முயற்சியில் அரசு உறுதியுடன் உள்ளது... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...
  • இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டியாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு... தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் வலியுறுத்தல்..
  • தேர்தலில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து... இந்திய ஈவிஎம்களை ஹேக் செய்ய முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பதில்...
  • டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஒரே இடத்தில் வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள்... பூங்காவை திறந்து வைத்தார் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர்...
  • தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை... வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி...
  • அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில், வெப்பநிலை அதிகரிக்கும்... அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை...
  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி... 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்...
  • யூரோ கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் போலந்தை வீழ்த்திய நெதர்லாந்து அணி... கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி...

Next Story

மேலும் செய்திகள்