காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியது எனது அதிர்ஷ்டம்.. இத்தாலியில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பெருமிதம்.....
  • இத்தாலியில் வீல் சேரில் இருந்த போப் பிரான்சிஸை அன்போடு கட்டியணைத்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி... இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு....
  • அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு.. உலக நன்மைக்காக இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என எக்ஸ் தளத்தில் மோடி பதிவு....
  • கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.. முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்கள், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள்...
  • குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு இறுதிசடங்கு.. தொழிலாளர்களின் உடல்களை பார்த்து, குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறல்...........
  • திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த பீதியை ஏற்படுத்திய சிறுத்தையால் களேபரம்.. கார் ஷெட்டில் பதுங்கிய சிறுத்தைக்கு பயந்து காரில் சிக்கித் தவித்த 5 பேர் பத்திரமாக மீட்பு...
  • திருப்பத்தூரில் பல மணி நேரம் போக்குகாட்டிய சிறுத்தை நள்ளிரவில் சிக்கியது... கார் ஷெட்டுக்குள் இருந்து தப்ப முயன்றபோது 2 முறை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தது வனத்துறை.....
  • ஜூன் 26ம் தேதி நடைபெறுகிறது மக்களவை சபாநாயகர் தேர்தல்.... கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர்கள் இல்லை என ஐக்கிய ஜனதா தளம் தகவல்........
  • நீட் தேர்வுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை.. நீட் தேர்வர்களின் நலன்களை பாதுகாக்க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி...
  • நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தல்...
  • நீட் வந்தபின்னர் தான் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து.... நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படும் என்றும் பேட்டி....
  • யூரோ கோப்பை கால்பந்து தொடர் லீக் போட்டி... ஸ்காட்லாந்தை 5-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சாய்த்து ஜெர்மனி அபார வெற்றி.......
  • 8வது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் ஜூலை 5ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு... சேப்பாக்கத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்றும் தகவல்....

Next Story

மேலும் செய்திகள்