காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 2 தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் பலி...
  • குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... கேரளாவை சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்...
  • குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் மோடி... உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்தார்...
  • குவைத் தீ விபத்து தொடர்பாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு... நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், இன்று குவைத் சென்றடைகிறார்...
  • குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி இரங்கல்... மத்திய கிழக்கில் உள்ள இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் கண்ணியமான முறையில் அமைய முன்னுரிமை அளிக்குமாறு ம​த்திய அரசுக்கு கோரிக்கை...
  • குவைத் தீ விபத்தில் தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு அயலக தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு... உதவி கேட்டு அணுகுவதற்கான தொலைபேசி எண்களும் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு...
  • பிரதமர் மோடி, இன்று இத்தாலி புறப்படுகிறார்... ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்...
  • சென்னையில் நள்ளிரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழை... மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பெய்தது...
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்...
  • வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று, நீர்த்தேக்கங்களில் இருந்து கட்டணமின்றி மண் எடுக்க அனுமதி... விவசாயிகள் மற்றும் பானை செய்வோரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
  • மணல் கொள்ளையில் ஈடுபடுவதற்காகவே, ஆறுகளில் தடுப்பணை கட்ட திமுகவும், அதிமுகவும் மறுக்கின்றன... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு...
  • விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்காக பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட 9 அமைச்சர்கள் அடங்கிய குழுவை திமுக நியமித்தது... ஒரு எம்.பி மற்றும் எம்எல்ஏ ஒருவரும் குழுவில் இடம் பெறுவதாக அறிவிப்பு..
  • டி 20 உலக கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி... சூப்பர் 8 சுற்றுக்குள் இந்திய அணி நுழைந்ததால், நியுயார்க்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்...

Next Story

மேலும் செய்திகள்