காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • 3 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார், பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்கிறார்...
  • கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்ய அனுமதி வழங்கக் கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு... தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு...
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்... புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்...
  • பாடத்திட்டங்களில் திராவிட இயக்க வரலாறு மற்றும் திராவிட தலைவர்களின் பாடங்களே அதிகமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு... இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனம்...
  • அயோத்தியில் கர சேவைக்கு ஜெயலலிதா ஆட்களை அனுப்ப சொன்னார் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்... முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்...
  • தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வரும் 3ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • கேரள மாநிலம் கொச்சியில் ஒரு மணி நேரத்தில் 98 மில்லி மீட்டர் அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை... கொல்லம், கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு..
  • கேரள மாநிலத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்... கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் இரவு நேர பயணத்திற்கு தடை...
  • ரீமால் புயல் தாக்கியதில் மிஜோராம் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு... மணிப்பூரில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு... பள்ளத்தில் கவிழ்ந்த லாரி...
  • உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்ட ராகுல் காந்தி... வெப்பம் கடுமையாக இருப்பதாக விளக்கம் அளித்தார்...
  • "பரமாத்மாவால் அனுப்பப்பட்டிருந்தால், ஏழைகளுக்கு உதவி இருக்க வேண்டுமே தவிர, அதானி, அம்பானிக்கு அல்ல..." பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி கடும் விமர்சனம்...
  • ஓட்டு ஜிகாத்துக்காக மேற்கு வங்காளத்தில் ஓ.பி.சி சமூக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்... மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு...
  • இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீரை நியமிக்க முடிவு... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என தகவல்...

Next Story

மேலும் செய்திகள்